ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

விஜய்யின் பிகில் பட வெளியீட்டுத் தேதி குழப்பம் தீர்ந்தது!

தீபாவளி பண்டிகை அக்டோபர் 27, அதாவது ஞாயிறு அன்று வருவதால் பிகில் பட வெளியீடு தொடர்பாகக் குழப்பம் ஏற்பட்டது.

News image
Updated On :17 செப்டம்பர் 2019, 11:01 am IST

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 27, அதாவது ஞாயிறு அன்று வருவதால் பிகில் பட வெளியீடு தொடர்பாகக் குழப்பம் ஏற்பட்டது. வெள்ளி, சனி ஆகிய இரு விடுமுறை தினங்களையும் பயன்படுத்தும் விதத்தில் அக்டோபர் 25 அன்று வெளியாகவேண்டும் என்றொரு கருத்தும் நிலவியது. இந்நிலையில் விஜய் படம் தீபாவளி பண்டிகை தினத்தன்று வெளியாவதையே ரசிகர்கள் விரும்புவதால் ஞாயிறு அன்றே, தீபாவளி தினத்தன்று பிகில் வெளியாகும் என்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ரஹ்மான் இசையமைப்பில் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் என இரு பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. பிகில் படத்தின் பாடல்கள் வரும் 19 அன்று வெளியிடப்படுகின்றன. பிகில் பாடல் வெளியீட்டு விழா, சன் டிவியில் வரும் ஞாயிறு அன்று (செப். 22) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.