நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ரசிகர்கள் அதிர்ச்சி: குறைந்த வாக்குகள் பெற்று, பிக் பாஸிலிருந்து வெளியேறிய தர்ஷன்!

இவ்வளவு ஆதரவு தரும் ரசிகர்களான நீங்கள் அவருக்கு வாக்களித்தீர்களா என அரங்கிலிருந்த பார்வையாளர்களிடம் கேட்டார்... 

Published On :31 ஜனவரி 2024, 3:44 pm IST

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் பட்டத்தை வெல்லக் கூடியவர் என போட்டியாளர்களாலும் ரசிகர்களாலும் கருதப்பட்ட இலங்கைத் தமிழர் தர்ஷன், மக்களின் குறைந்த வாக்குகளைப் பெற்று போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வாரத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைகிற நிலையில் இறுதிச்சுற்றுப் போட்டியாளர் என்கிற கெளரவத்தை அடையமுடியாமல் அவர் வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிக் பாஸ் போட்டியை வெல்லக்கூடியவர் என தர்ஷனைத் தானும் எண்ணியதாக கமல் கூறினார். பிறகு, இவ்வளவு ஆதரவு தரும் ரசிகர்களான நீங்கள் அவருக்கு வாக்களித்தீர்களா என அரங்கிலிருந்த பார்வையாளர்களிடம் கேட்டார். சமூகவலைத்தளங்களிலும் தர்ஷனின் வெளியேற்றத்தை நம்பமுடியாமல் பலரும் அவருக்கு ஆதரவாகப் பதிவுகளை எழுதினார்கள். 

இதையடுத்து சாண்டி, முகின், ஷெரின், லாஸ்லியா என இந்த நான்கு பேரும் பிக் பாஸின் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளார்கள். இந்த வார ஞாயிற்றுகிழமையுடன் பிக் பாஸ் 3 நிறைவடைகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.