நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிக் பாஸ் இல்லத்துக்குள் திருமணம் நடக்கப் போகிறதா?

நான் மிகவும் பக்குவமான பெண். முடிவுகளை எப்படி எடுக்கவேண்டும் என்று எனக்குத் தெரியும்....

News image
Updated On :30 செப்டம்பர் 2019, 6:57 am

எழில்

ஹிந்தி பிக் பாஸ் 13 நேற்றுதான் தொடங்கியியிருக்கிறது. ஆனால், தொடங்கும்போதே பெரிய சர்ச்சை ஒன்றுடன் ஆரம்பமாகியுள்ளது.

இந்த வருட ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியையும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். ஞாயிறு அன்று 9 மணிக்கும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

பிரபல தொலைக்காட்சி நடிகை ரஷாமி தேசாய், தன்னுடைய காதலர் அர்ஹான் கானுடன் இணைந்து இப்போட்டியில் கலந்துகொள்கிறார். நடிகை ரஷாமி தேசாய், 2012-ல் நடிகர் நந்திஷ் சாந்துவைத் திருமணம் செய்தார். எனினும் இரு வருடங்கள் கழித்து இருவரும் பிரிந்துவிட்டார்கள். தற்போது ரஷாமி, பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்த நிலையில், சில வாரங்களில் கழித்து அர்ஹான் கானும் போட்டியாளராகப் பங்கேற்கவுள்ளார். 

இந்நிலையில், ரஷாமி தேசாயுடன் அவருடைய காதலரான அர்ஹான் கானும் பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழையவுள்ளதால் இருவரும் பிக் பாஸ் இல்லத்துக்குள்ளேயே திருமணம் செய்யவிருக்கிறார்கள் என்றொரு செய்தி சில நாள்களுக்கு முன்பு வெளியானது. ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முன்பு இரு திருமணங்கள் நடைபெற்றுள்ளன. ஹிந்தி பிக் பாஸ் 4 நிகழ்சியில் அலி மர்சண்ட் - சாரா கான் திருமணம் செய்துகொண்டார்கள் (ஆனால் சில மாதங்களில் பிரிந்து, விவகாரத்து பெற்றுவிட்டார்கள்). ஹிந்தி பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் விக்ராந்த் சிங் - மோனலிசா திருமணம் செய்துகொண்டார்கள். இதனால் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி காணவுள்ள 3-வது திருமணம் என்கிற எதிர்பார்ப்பு அந்தச் செய்தியைப் படித்த ரசிகர்களுக்கு ஏற்பட்டது. 

ஆனால் இதற்கு பலத்த மறுப்பு தெரிவித்துள்ளார் ரஷாமி. அவர் கூறியதாவது: இதுபோன்ற வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என்று எனக்கு முதலில் தெரிந்தாகவேண்டும். நான் மிகவும் பக்குவமான பெண். முடிவுகளை எப்படி எடுக்கவேண்டும் என்று எனக்குத் தெரியும். பிக் பாஸ் இல்லத்துக்குள் திருமணம் செய்வது போன்ற காரியத்தை யாராவது செய்வார்களா எனத் தெரியவில்லை. இது ஒரு கேவலமான வதந்தி. திருமணம் என்பது அருமையான விஷயம். நான் அதைச் செய்கிறபோது நல்ல முறையில் மக்களிடம் தெரியப்படுத்துவேன் என்று கூறியுள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.