பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நடிகை மதுமிதா, தற்கொலை மிரட்டல் விடுப்பதாக விஜய் டிவி நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.
இந்நிலையில் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த காரணத்துக்காகக் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் நடிகை மதுமிதா. நடிகை ஷெரின் மற்றும் இதர போட்டியாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக தன் கையைத் தானே அறுத்துக்கொண்டார் மதுமிதா. இதனால் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நடிகை மதுமிதா, தற்கொலை மிரட்டல் விடுப்பதாக விஜய் டிவி நிர்வாகம் சென்னை - கிண்டி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. விஜய் டிவி நிறுவனத்தின் சட்டத்துறை மேலாளர் பிரசாத் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக மதுமிதா ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். பிறகு, ஒரு நாளைக்கு ரூ. 80,000 வீதம் மீதமுள்ள 42 நாள்களுக்கான பணத்தைத் திருப்பித் தருவதாகவும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனாவுக்கு அளித்த குறுஞ்செய்தியில், பணத்தை இரு நாள்களில் தராவிட்டால் தற்கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார் என அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்

குமரியில் படகு சேவை ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு: நயினாா் நாகேந்திரன்

சிறப்பு அலங்காரத்தில் அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா்...
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


