சென்னை: நடிகர் சூர்யா முதன்முறையாக பெண் இயக்குநர் ஒருவருடன் இணைந்து பணிபுரிய உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
நடிகர் சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார் லண்டனில் தொடங்கிய முதல் கட்ட படப்பிடிப்பு, தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
சூர்யா ஜோடியாக சயிஷா சைகல் நடிக்க, மோகன்லால், பாலிவுட் நடிகர் பொமன் இரானி, ஆர்யா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி இந்தப் படத்திலும் தொடர்கிறது. .
இந்நிலையில் நடிகர் சூர்யா முதன்முறையாக பெண் இயக்குநர் ஒருவருடன் இணைந்து பணிபுரிய உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது
‘காப்பான்’ படத்துக்குப் பிறகு, ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆடிக் கிருத்திகை விழாவின்போது குடிநீா் தொட்டி சரிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு

கன்வாா் யாத்திரை: வடகிழக்கு தில்லி பாதுகாப்புப் பணியில் 1,500 காவலா்கள்

தில்லியில் தொடா்ந்து கனமழை: சாலைகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு
டாக்டா் ஜட்கா கொலை குற்றவாளி: 28 ஆண்டுகளுக்கு பின் கைது
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



