கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்து முதலில் வெளியேறிய ஃபாத்திமா பாபு!

முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை அனுயாவும் 2-வது சீஸனில் தொகுப்பாளர் மமதி சாரியும் முதல் வாரங்களில் வெளியேறினார்கள்...

News image
Updated On :8 ஜூலை 2019, 6:01 am

எழில்

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். 

இந்நிலையில் பிக் பாஸ் போட்டி தொடங்கும்போது முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்தார் செய்தி வாசிப்பாளராகப் புகழ்பெற்ற ஃபாத்திமா பாபு. இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக அவர் வெளியேற்றப்பட்ட நிகழ்வு காண்பிக்கப்பட்டது. இந்த சீஸனின் முதல் எவிக்‌ஷன் பட்டியலில் இடம்பிடித்த போட்டியாளர்களில் முதல் நபராக நடிகை மதுமிதா காப்பாற்றப்பட்டார். இந்நிலையில் ரசிகர்களின் குறைந்த வாக்குகளைப் பெற்று முதல் போட்டியாளராக ஃபாத்திமா பாபு வெளியேறியுள்ளார். 

முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை அனுயாவும் 2-வது சீஸனில் தொகுப்பாளர் மமதி சாரியும் முதல் வாரங்களில் வெளியேறினார்கள். இதையடுத்து முதல் வாரமே வெளியேறிய போட்டியாளர்களின் பட்டியலில் ஃபாத்திமா பாபுவும் இணைந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.