கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்த அமலா பால்: ஆடை பட பிரச்னை தீர்ந்தது!

படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதால் இன்று வெளியாகவேண்டும் என்பதில் அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார்... 

News image
Updated On :19 ஜூலை 2019, 12:28 pm

எழில்

மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் அடுத்து இயக்கியுள்ள படம் - ஆடை. அமலா பால் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ஆடை படத்தின் காலைக் காட்சி மற்றும் பத்திரிகையாளர் காட்சிகள் ரத்தாகின. தயாரிப்பாளருக்குப் பண விவகாரம் தொடர்பான பிரச்னைகள் இருந்ததால் திரையரங்குகளுக்கு கேடிஎம் அனுப்பப்படவில்லை. இதனால் காலைக்காட்சிகளுக்கு முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். தங்கள் வருத்தத்தையும் கோபத்தையும் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்தார்கள்.

தமிழ் சினிமாவில் அடிக்கடி இதுபோன்ற சிக்கல்கள் உருவாவதால் ரசிகர்களுக்குச் சிக்கல் ஏற்படுகிறது. ரசிகர்களின் பணம் மட்டுமல்லாமல் நேரமும் வீணாகிறது. ஒரு படத்தின் வெளியீட்டுக்குப் பிரச்னை எதுவும் இல்லை என்கிற நிலை உருவான பிறகே முன்பதிவைத் தொடங்கவேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தாலும் இதுபோன்ற சிக்கல்களுக்குத் தீர்வு எதுவும் இதுவரை காணப்படவில்லை.

இந்நிலையில் ஆடை பட வெளியீடு தொடர்பான பிரச்னையில் தலையிட்டு சுமூகமாக முடித்துள்ளார் அமலா பால். படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதால் இன்று வெளியாகவேண்டும் என்பதில் அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். என்ன செய்தால் படம் இன்று வெளியாகும் என்று காலையிலிருந்து தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் தொடர்ந்து விவாதித்து, பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டுள்ளார் அமலா பால். தயாரிப்பாளரின் சிக்கலைத் தீர்க்க தன்னுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்தார். இதையடுத்து பண விவகாரத்துக்கு ஒரு தீர்வு கிடைத்தது. இதனால் ஆடை படம் தமிழகம் முழுக்க மாலை 6 மணிக்காட்சியுடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.