ஒரு கனவுப் படம். அதை நிறைவேற்ற சரியான திட்டமிடல், இப்படித்தான் இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க முடிவு செய்திருந்தார். காலத்தில் நிலைத்த பொக்கிஷமான கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு உயிர் கொடுக்க, மறக்க முடியாத அக்கதாபாத்திரங்களை திரையில் உலவ விட அவர் கதாபாத்திரத் தேர்வை சில மாதங்கள் முன்பே முடித்து விட்டார்.
ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டரையராக பார்திபன், சுந்தர சோழனாக சரத்குமார், வந்தியத் தேவனாக கார்த்தி, ராஜராஜனாக அதர்வா, குந்தவையாக அனுஷ்கா, வானதியாக ராஷி கன்னா, பூங்குழலியாக ரகுல் ப்ரீத் சிங், மற்றும் மிக முக்கியமாக நந்தினியாக ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள். ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், நாசர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். விஜய் சேதுபதியை நடிக்க கேட்டு அவர் தேதி இல்லாததால் அவரிடம் இருந்து ஒப்புதல் இதுவரை வரவில்லை.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை டிசம்பர் மாதம் துவங்க முடிவு செய்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இதுவரை இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களில் அதிகமான திரை நட்சத்திரங்கள் நடிக்கும் மிகப் பிரமாண்டமான படமாக பொன்னியின் செல்வன் உருவாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஸ்ரீ பாஷ்யகா்களின் கந்தப்பூ பொடி உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்
இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


