நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஆர்யா - நடிகை சயீஷா திருமணம்: பிரபலங்கள் பங்கேற்பு! (படங்கள்)

திருமண  வரவேற்பில் நடிகர் சூர்யா, கார்த்தி, விஷால், அல்லு அர்ஜூன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்...

News image
Updated On :11 மார்ச் 2019, 5:33 am

பிரபல பாலிவுட் நடிகர்களான சாயிரா பானு, திலீப் குமாரின் உறவினரான சயீஷா, தமிழில் வனமகன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடித்த சயீஷாவுக்கு அவருடன் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறி, தற்போது திருமணமாக மலர்ந்துள்ளது. இருவரும் தற்போது காப்பான் என்கிற கே.வி. ஆனந்தின் படத்திலும் நடித்துள்ளார்கள்.

ஆர்யா (38) - சயீஷா (21) ஆகியோரின் காதல் திருமணம், மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக காதலர் தினத்தன்று இருவரும் அறிவித்தார்கள். 

இந்நிலையில் ஆர்யாவின் திருமண நிகழ்ச்சிகள் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களாக ஹைதராபாத்தில் உள்ள தாஜ் ஃபலாக்நுமா பேலஸில் நடைபெற்றன. நேற்று இஸ்லாமிய முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பிறகு நடைபெற்ற திருமண  வரவேற்பில் நடிகர் சூர்யா, கார்த்தி, விஷால், அல்லு அர்ஜூன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.