ஐபிஎல் 2019 இறுதி ஆட்டத்தில் சென்னையை 1 ரன் வித்தியாசத்தில் வென்று நான்காவது முறையாக மும்பை சாம்பியன் பட்டம் வென்றது.
ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை-சென்னை அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதின.
முதலில் ஆடிய மும்பை 149/8 ரன்களை எடுத்தது. (பொல்லார்ட் 41), பின்னர் ஆடிய சென்னை 148/7 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அதிரடி வீரர் ஷேன் வாட்ஸன் அபாரமாக ஆடி 80 ரன்களை விளாசியது வீணானது.
1 பந்தில் 2 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் சென்னையின் தாகுரை கடைசி பந்தில் எல்பிடபிள்யு முறையில் அவுட்டாக்கி மும்பையை வெற்றி பெறச் செய்தார் லஸித் மலிங்கா.
இந்த வெற்றி மூலம் 4-ஆவது முறையாக பட்டம் வென்றது மும்பை.
முதலிடம் பெற்ற அந்த அணிக்கு ரூ.20 கோடியும், இரண்டாம் இடம் பெற்ற சென்னை அணிக்கு ரூ.12.5 கோடியும், தில்லி, ஹைதரபாத் அணிகளுக்கு தலா ரூ.8.75 கோடியும் ரொக்கப்பரிசாக அளிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் - வெள்ளி விலை எவ்வளவு?

இசையே, உனக்கு என்னவென்று பெயரிடுவது?

ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்வி

ராகதேவனின் இசையும் இசைக்குழுவும் போற்றுதலுக்குரியதே...
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



