திடீர் தலைவலியால் பாதிக்கப்பட்ட நடிகரின் உடல்நிலை கவலைக்கிடம்!

இயக்குனர் பாரதிராஜாவின் 'என்னுயிர் தோழன்' படத்தில் அறிமுகமானவர் நடிகர் தென்னவன்
நடிகர் தென்னவன்
நடிகர் தென்னவன்

இயக்குனர் பாரதிராஜாவின் 'என்னுயிர் தோழன்' படத்தில் அறிமுகமானவர் நடிகர் தென்னவன். தொடர்ந்து விருமாண்டி, வாகை சூடவா, சண்டக்கோழி, சுந்தர பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நெடுந்தொடரான ‘ராசாத்தி’யில் நடித்து வருகிறார்.

வில்லன், குணசித்திரம் என எந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டாலும், தனது எதார்த்த நடிப்பால் சிறப்பாக நடிக்கக் கூடியவர் தென்னவன். நல்ல உடல் நலத்துடன் இருந்த இவர், கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட தலைவலி தீவிரமான காரணத்தால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரசப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மூளையில் கட்டி இருப்பதைக் கண்டறிந்தனர்.

ஐசியூவில் தொடர்ந்து தென்னவனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. தென்னவனைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக போராடிவருகின்றனர். ஆனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றனர். இந்தச் செய்தி அவரது ரசிகர்களுக்கும், திரைத் துறையினருக்கும் மனவருத்தத்தை அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com