கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் குட்டிப்புலி நடிகர்!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்பு நடிகராக ஜொலித்தவர்கள் மணிவண்ணன், மனோபாலா, சிங்கம்புலி என நிறைய பேர் இருக்கிறார்கள்.

Published On :


தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்பு நடிகராக ஜொலித்தவர்கள் மணிவண்ணன், மனோபாலா, சிங்கம்புலி என அனேகம் பேர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது குட்டிப்புலி புகழ் இயக்குனர் மற்றும் நடிகர் சரவண சக்தியும் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தண்டாயுதபாணி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் சரவண சக்தி. அந்தப் படம் இவருக்கு விமரிசனரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படம், மட்டுமல்லாமல் நல்ல இயக்குனர் என்ற பெயரையும் பெற்றுத்தந்தது. அதன் பின்பு ரித்தீஷ் உடன் இணைந்து இவர் இயக்கிய நாயகன் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்தது.

Story image

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு  சசிகுமாரின் நடிப்பில்  வெளிவந்த குட்டிப்புலி படத்தில் இயக்குனர் முத்தையா இவரை நடிகனாக அறிமுகம் செய்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  அதைத் தொடர்ந்து மருது, சண்டக்கோழி2, கொடிவீரன், தர்மதுரை போன்ற படங்களில் அசத்தியவர்.  தற்போது மாமனிதன், ரண சிங்கம், அடுத்த சாட்டை, வால்ட்டர் என 25 படங்களுக்கும் மேல்  நடித்து வருகிறார்.

எனினும் தன்னுள் உள்ள இயக்குனர் என்ற படைப்பாளன் இவரை விடாது துரத்தவே R K சுரேஷ் நடிப்பில் பில்லா பாண்டி படத்தை இயக்கினார் இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  தமிழில் தற்போது முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வரும் இவர், விரைவில் தனது அடுத்த படத்தை இயக்கும் வேலையில் மும்பரமாக ஈடுபட்டுள்ளார் இதற்காக ஒரு முன்னணி கதாநாயகருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இயக்குனராகி நடிப்பில் அசத்தியவர் மீண்டும் இயக்கத்தில் தடம் பதிக்க இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.