சில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்!கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு!முதல்வா் விஜய் இன்று பெருந்துறை வருகை!இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்

கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று (நவ. 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக....

rain

பள்ளிகளுக்கு விடுமுறை - பிரதிப் படம்

Updated On :

கனமழை காரணமாக, கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று (நவ. 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு வங்கக் கடலில் உருவான ‘முரசு’ புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நெல்லூர் - நர்சாபூர் இடையே ஆந்திரக் கடற்கரையை, முரசு புயல் நவ.3-ஆம் தேதி (இன்று) அதிகாலை கரையைக் கடந்தது.

வட தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

புயல் காரணமாக, கடலூர் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிந்தது. இந்த நிலையில், புயல் ஆந்திர மாநிலத்தை நோக்கி நகர்ந்ததையடுத்து, திங்கள்கிழமை பிற்பகல் கடலூர் துறைமுகங்கத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கப்பட்டு, 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

இதன் காரணமாக, கடலூர் தாலுகாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்த நிலையில், கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ. 3) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Summary

Due to heavy rain, a holiday has been declared for schools in Cuddalore taluk today (Nov. 3).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER