சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அட்லி கையில் வெற்றிப் படம்: விஜய் பட இயக்குநர் பாராட்டு

சமீபகாலமாக இதுபோன்ற அட்டகாசமான படமொன்றைப் பார்க்கவில்லை...

News image
Updated On :27 ஏப்ரல் 2020, 6:23 am

DIN

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி, 2017-ல் சங்கிலி புங்கிலி கதவ தொற என்கிற படத்தைத் தயாரித்தார். இதையடுத்து தனது ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் சார்பாக வெளியிடும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்.

அந்தகாரம் என்கிற படத்தை அறிமுக இயக்குநர் விக்னராஜன் இயக்கியுள்ளார். இசை - பிரதீப் குமார். அந்தகாரம் படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிருஷ்ணன், பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல், குமார் நடராஜன் போன்றோர் நடித்துள்ளார்கள். முழுப் படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அந்தகாரம் படத்தைப் பார்த்த விஜய்யின் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது:

அந்தகாரம் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சமீபகாலமாக இதுபோன்ற அட்டகாசமான படமொன்றைப் பார்க்கவில்லை. விக்னராஜன், உங்கள் எழுத்துக்கு நான் ரசிகன். அர்ஜுன் தாஸ், வினோத் கிருஷ்ணன் அருமையாக நடித்துள்ளார்கள். அட்லி, உங்கள் கையில் வெற்றிப் படமொன்று உள்ளது எனக் கூறியுள்ளார். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.