விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ரிஷி கபூரின் மகள் தில்லியிலிருந்து மும்பைக்குச் செல்ல அனுமதி

ரிஷி கபூருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவருடைய மகளான ரித்திமா கபூர், தில்லியிலிருந்து மும்பை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2020, 9:43 am

DIN

ரிஷி கபூருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவருடைய மகளான ரித்திமா கபூர், தில்லியிலிருந்து மும்பை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் இன்று காலமானார். அவருக்கு வயது 67.

2018-ல் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் ரிஷி கபூர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரிஷி கபூர் அமெரிக்காவின் நியூயார்க்கில் புற்றுநோய் சிகிச்சையை முடித்துக் கொண்டு, மும்பைக்கு திரும்பினார். ரிஷி கபூருடன் அவரது மனைவியும், நடிகையுமான நீத்து கபூரும் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ரிஷி கபூருக்கு சிகிச்சை மேற்கொண்டிருந்தபோது ஷாருக் கான், ஆலியா பட், ஆமிர் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அனுபம் கெர், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் மும்பையில் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து வந்த ரிஷி கபூர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

மறைந்த ரிஷி கபூரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதையடுத்து தனது தந்தைக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக ரிஷி கபூரின் மகளான ரித்திமா கபூர், தில்லியிலிருந்து மும்பை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் ரித்திமா கபூருடன் இணைந்து மும்பைக்குச் செல்ல நால்வருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தில்லி காவல் துணை ஆணையர் (தென் கிழக்கு) ஆர்பி மீனா தகவல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.