திரையுலகில் 42 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மூத்த நடிகை ராதிகாவை இயக்குநர் பாரதிராஜா பாராட்டியுள்ளார்.
பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ராதிகா. தற்போது திரையுலகில் 42 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி ராதிகாவை வாழ்த்தி இயக்குநர் பாரதிராஜா ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது:
என் இனிய தமிழ் மகளே, கிழக்கே போகும் ரயிலில் பாஞ்சாலி என்கின்ற 16 வயது ஒரு மழலையை ஏற்றி கொடி அசைத்து பயணிக்க வைத்தேன்..
42 வருடமாகிறது, என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை..
பால்வெளித் திரளுக்கு எல்லை இல்லை. உன் திரை உலகப் பயணத்துக்கும் உன் பாசத்துக்கும் முடிவேதும் இல்லை. வாழ்த்துக்கள் என்றார்.
இதற்குப் பதில் அளித்த ராதிகா கூறியதாவது:
இதைவிடவும் சிறப்பு எதுவுமில்லை. உங்களால் தான் இந்த நிலையில் நான் உள்ளேன். உங்கள் வாழ்த்துகள் தான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. ஆண்கள் ஆதிக்கமுள்ள இந்த உலகில் பெண்களின் சாதனைகள் கொண்டாடப்படுவதில்லை. இந்நிலையில் உங்கள் வாழ்த்து எப்போதும் போல சிறப்பைப் பெறுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


