விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

எஸ்.பி.பி.க்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை: எஸ்.பி. சரண் தகவல்

எஸ்.பி.பி. உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2020, 11:46 am

DIN

பாடகர் எஸ்.பி.பி.க்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படு வருவதாக அவருடைய மகன் எஸ்.பி. சரண் கூறியுள்ளார். 

பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு எக்மோ மற்றும் வெண்டிலேட்டா் கருவிகளின் துணையுடன் தீவிர சிகிச்சையக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் அவரது உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே இருந்தாலும், முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பாடகர் எஸ்.பி.பி. உடல்நலம் பெற திரையுலகினரும் பொது மக்களும் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் எஸ்.பி.பி. மகன் எஸ்.பி. சரண், இன்று தகவல் தெரிவித்துள்ளதாவது:

எஸ்.பி.பி. உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். என்றாலும் ரசிகர்களின் வேண்டுதல் அவரை மீட்கும். திரையுலகினரின் கூட்டுப் பிரார்த்தனைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். உலகம் முழுக்க பிரார்த்தனை செய்கிறார்கள். நன்றி சொல்ல வார்த்தை இல்லை. தலைவணங்குகிறோம். அப்பாவைக் கடவுள் மீட்டுத் தந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.