ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் மீண்டும் பங்கேற்பு!

கோன் பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 9:56 am

DIN

கரோனாவிலிருந்து சமீபத்தில் மீண்ட பிரபல நடிகர் அமிதாப் பச்சன், கோன் பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

கோன் பனேகா குரோர்பதி என்கிற நிகழ்ச்சியின் முதல் மூன்று சீஸன்கள் 2000 முதல் 2007 வரை ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 2010 முதல் சோனி டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. 3-வது சீஸனை ஷாருக் கான் தொகுத்து வழங்கினார். இதர 10 சீஸன்களின் நிகழ்ச்சிகளையும் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கியுள்ளார்.

அமிதாப் பச்சன் (77), கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 11-ஆம் தேதி மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினாா்.

இந்நிலையில் கோன் பனேகா குரோர்பதி சீஸன் 12 நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் மீண்டும் தொகுத்து வழங்குகிறார். 

கோன் பனேகா குரோர்பதி சீஸன் 12 நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதைச் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன். அவர் கூறியதாவது:

படப்பிடிப்புக்கு மீண்டும் திரும்பியுள்ளேன். எங்குப் பார்த்தாலும் நீல வண்ண பிபிஇ கிட். கேபிசி 12 நிகழ்ச்சிக்காக. 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 20 வருடங்கள் ஆகிவிட்டன என்று அந்நிகழ்ச்சி குறித்த தன் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள், செவிலியா் பிபிஇ கிட் எனப்படும் முழுப் பாதுகாப்பு கவச உடைகளைப் பயன்படுத்தி வருகிறாா்கள். கோன் பனேகா குரோர்பதி படப்பிடிப்பிலும் பிபிஇ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச உடை அணிந்து அனைவரும் பணியாற்றி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.