தமிழில் அறிமுகமாகிறார் டிரான்ஸ் பட இயக்குநர்
பஹத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிரான்ஸ் படத்தை இயக்கிய அன்வர் ரஷீத்...


பஹத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிரான்ஸ் படத்தை இயக்கிய அன்வர் ரஷீத், தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
உஸ்தாத் ஹோட்டல், டிரான்ஸ் போன்ற மலையாளப் படங்களை இயக்கியுள்ள அன்வர் ரஷீத், பெங்களூர் டேஸ், பிரேமம், டிரான்ஸ் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.
மலையாளத் திரையுலகில் முக்கியமான நபராக உள்ள அன்வர் ரஷீத், அடுத்ததாக தமிழ்ப் படத்தை இயக்குகிறார். கைதி படத்தில் நடித்த அர்ஜூன் தாஸ் நடிக்கும் கிராமத்துக் கதை கொண்ட தமிழ்ப் படத்தை இயக்கவுள்ளதாக ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
இயக்குநர் மிதுன் மேனுவல் திரைக்கதை எழுதவுள்ளார். இதை அவர் ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளார். ஆமாம்... அன்வர் ரஷீத் இயக்கும் தமிழ்ப் படத்துக்குத் திரைக்கதை அமைக்கிறேன். அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...