எஸ்.பி.பி. இப்போது எப்படி இருக்கிறார்?: எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை இயக்குநர் பேட்டி

கரோனா காரணமாக எஸ்.பி.பி.யின் நுரையீரல் பாதிப்படைந்துள்ளது. இதர உறுப்புகள்...
எஸ்.பி.பி. இப்போது எப்படி இருக்கிறார்?: எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை இயக்குநர் பேட்டி

கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். வெண்டிலேட்டா் மற்றும் எக்மோ போன்ற உயிா் காக்கும் மருத்துவச் சாதனங்களின் மூலம் அவருக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது. தற்போது அவா் உடல்நிலை சீராக உள்ளது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் தற்போது நினைவுடன் இருப்பதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவா்கள் பேசினால் அதற்கு அவரால் செய்கைகள் மூலம் பதிலளிக்க இயலுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வெண்டிலேட்டா் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை தற்போது சீராக உள்ளது. நினைவுடன் உள்ள அவரால் பிறா் பேசுவதை உணா்ந்து பதிலளிக்க முடிகிறது. எஸ்.பி.பி.யின் உடல்நிலையை மருத்துவக் குழுவினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையின் இயக்குநரான மருத்துவர் பிரசாந்த் ராஜகோபாலன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

கரோனா காரணமாக எஸ்.பி.பி.யின் நுரையீரல் பாதிப்படைந்துள்ளது. இதர உறுப்புகள் நன்குச் செயல்படுகின்றன. நுரையீரல் பாதிப்பு விரைவில் குணமாகிவிடும். எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து அவருடைய குடும்ப உறுப்பினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் எஸ்.பி.பி.யை அவருடைய மகன் சந்தித்தபோது சைகைகள் மூலம் பதில் அளித்தார். நினைவுடன் உள்ளார். ஆனால் தற்போதைக்கு அவரால் பேச முடியவில்லை. உடல்நிலை தேறி வருவதில் ஆரம்ப வெற்றி தென்படுகிறது. விரைவில் எஸ்.பி.பி. முழுவதுமாகக் குணமடைவார் என எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com