47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தி டர்டி பிக்சர் படத்தில் நடித்த ஆர்யா பானர்ஜி மரணம்

உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகக் காவலர்கள் அனுப்பி வைத்ததுடன் வழக்குப் பதிந்து...

News image
படம் - twitter.com/biditabag
Updated On :12 டிசம்பர் 2020, 11:14 am

DIN

பாலிவுட் நடிகை ஆர்யா பானர்ஜி அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

2011-ல் வெளிவந்த தி டர்டி பிக்சர் படத்தில் ஷகீலா வேடத்தில் நடித்தார் ஆர்யா பானர்ஜி. மேலும் சில படங்களில் நடித்துள்ளார். ஆர்யா, சிதார் கலைஞர் நிகில் பானர்ஜியின் மகள். 

இந்நிலையில் தெற்கு கொல்கத்தாவில் வசிந்த வந்த 33 வயது ஆர்யா, தனது வீட்டுப் படுக்கை அறையில் இன்று சடலமாகக் கிடந்துள்ளார். அந்த வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், இன்று காலை, வீட்டுப் பணிப்பெண் வழக்கம்போல வேலைக்கு வந்துள்ளார். கதவை அவர் பலமுறை தட்டியும் திறக்கப்படாததால் காவலர்களிடம் இதுபற்றி கூறினார். தகவல் அறிந்த காவலர்கள், கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது ஆர்யா, சடலமாகக் கிடந்துள்ளார். 

இதையடுத்து, உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகக் காவலர்கள் அனுப்பி வைத்ததுடன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.