ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்: இனி இவர்தான் புதிய முல்லை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சித் தொடரில் சித்ராவுக்கு அடுத்ததாக முல்லை வேடத்தில் நடிக்க காவ்யா தேர்வாகியுள்ளார்... 

News image
படம் - instagram.com/kaavyaarivumanioffl
Updated On :23 டிசம்பர் 2020, 4:54 am

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சித் தொடரில் சித்ராவுக்கு அடுத்ததாக முல்லை வேடத்தில் நடிக்க காவ்யா தேர்வாகியுள்ளார். 

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு பூந்தமல்லி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்அடிப்படையில், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்தை போலீஸார் கைது செய்து, பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனர். 

2018 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார் சித்ரா. இந்நிலையில் தற்போது சித்ராவுக்குப் பதிலாக நடிகை காவ்யா, முல்லை கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாரதி கண்ணம்மா தொடரில் நடித்துள்ளார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் நடிகை ஸ்ரீவித்யா இத்தகவலை இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார். டிசம்பர் 23 முதல் முல்லையாக காவ்யா அறிவுமணி நடிப்பார். சித்துவுக்கு மாற்று கிடையாது. ஆனால் முல்லைக்கு உண்டு. காவ்யாவுக்கு அனைவரும் ஆதரவு தெரிவியுங்கள் என்று ஸ்ரீவித்யா கூறியுள்ளார். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.