தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்ற விஜய்யின் ‘மாஸ்டர்’
நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திற்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.


சென்னை: நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திற்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய், விஜய் சேதுபதி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால், கரோனா பொது முடக்கம் காரணமாக படம் வெளியிடப்படவில்லை.
இதனிடையே படம் ஓடிடியில் வெளியாகும் என முதலில் சில தகவல்கள் பரவி வந்தது. அதையடுத்து படக்குழு ஒரு அறிக்கையை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம் என்று கூறியிருந்தது. தொடர்ந்து மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திற்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
தணிக்கைச் சான்றிதழ் பெற்றதையடுத்து 2021-ஆம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியிடப்படும் என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...