லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இதற்கு அடுத்ததாக அவர் எந்த இயக்குநரின் படத்தில் நடிக்கவுள்ளார் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது.
பிகில் வெற்றிக்குப் பிறகு அட்லியுடன் இணைந்து விஜய் இன்னொரு படம் நிச்சயம் செய்வார் என்றாலும் அந்தப் படம் விஜய்யின் 65-வது படமாக இருக்காது என்று கூறப்படுகிறது. வெற்றிமாறன், பாண்டிராஜ் என விஜய்யின் 65-வது பட இயக்குநர் குறித்து பலருடைய பெயர்கள் அடிபடுகின்றன.
இந்நிலையில் சமீபத்திய தகவலாக சுதா கொங்கராவின் பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கராவின் அடுத்தப் படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம். இந்தப் படம் ஏப்ரலில் வெளிவரவுள்ளது. இதையடுத்து விஜய் நடிக்கும் படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளார் என்பதுதான் சமீபத்திய தகவல்.
சுதா கொங்கரா சொன்ன கதை விஜய்க்குப் பிடித்துப் போக, அடுத்ததாக சூரரைப் போற்று படத்தைப் பார்க்க விஜய் விருப்பப்பட்டுள்ளார். தன்னுடைய பாணிக்கு சுதா கொங்கராவின் இயக்கம் பொருத்தமாக இருக்குமா என்பதை அறிய சூரரைப் போற்று படத்தைப் பார்க்க அவர் திட்டமிட்டுள்ளார். படம் பார்த்த பிறகு தன்னுடைய முடிவை விஜய் அறிவிக்கவுள்ளார். மாஸ்டர் படம் வெளிவரும் முன்பு, விஜய்யின் 65-வது படத் தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
ஏப்ரல் 9 அன்று மாஸ்டர் படம் வெளிவருவதால் விஜய்யின் அடுத்தப் படம் 2021 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சுதா சமீபத்திய இயக்கிய இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய இரு படங்களையும் அவர் நிதானமாகவே இயக்கியுள்ளார். கதைத் தயாரிப்புக்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டு களத்தில் இறங்குபவர் என்பதால் விஜய்யின் வேகத்துக்கு சுதா எந்தளவுக்கு ஈடு கொடுப்பார் என்பது இனிமேல் தான் தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


