அஜித்துக்கு வில்லனாக வலிமை படத்தில் நடிக்கிறேனா?: நடிகர் பிரசன்னா விளக்கம்

வலிமை படத்தில் நடிகர் பிரசன்னா வில்லனாக நடிப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த வாய்ப்பு தற்போது அமையவில்லை என்று...
அஜித்துக்கு வில்லனாக வலிமை படத்தில் நடிக்கிறேனா?: நடிகர் பிரசன்னா விளக்கம்
Updated on
1 min read

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணையும் இப்படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வலிமை படத்தில் நடிகர் பிரசன்னா வில்லனாக நடிப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த வாய்ப்பு தற்போது அமையவில்லை என்று நடிகர் பிரச்ன்னா விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

நான், வலிமை படத்தில் நடிக்கவேண்டும் என்று விரும்பிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி. வலிமை படத்தில் நான் நடிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடந்தது. என் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணம் குறித்து தகவல் தெரிவிக்க நானும் ஆவலாக இருந்தேன். ஆனால் அஜித்துடன் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு இந்தமுறை அமையவில்லை. இந்த வருத்தத்தில் நான் இருக்கும் சமயத்தில் உங்கள் அன்பினால் இன்னமும் வலிமை பெறுகிறேன். எப்போதும் அடுத்த வாய்ப்பு நிச்சயம் அமையும். அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு விரைவில் அமையும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com