

தீரஜ் வைத்தி இயக்கத்தில் சித்தார்த் நடித்தும் தயாரித்தும் 2016-ல் வெளியான படம் - ஜில் ஜங் ஜக்.
இப்படத்தின் இயக்குநர் ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:
டிசம்பர் 24, 2016. இந்த நாளை என்னால் மறக்க முடியாது. சினிமா பின்புலம் இல்லாமல் நானும் 10 பேரும் இணைந்து உருவாக்கிய ஜில் ஜங் ஜக் படம், அந்த ஆண்டின் மோசமான படங்களில் ஒன்றாக ஒரு செய்தித்தாளில் செய்தி வெளியானது. நான் இந்தத் துறைக்குள் நுழையக்கூடாது வரவேண்டாம் என்று சொன்னவர்களை நினைத்துக்கொண்டேன். நாங்கள் அப்போதே சொன்னோம் இல்லையா என்கிற அவர்களின் பேச்சைக் கேட்கப் பயந்தேன். என் வீட்டின் அருகே உள்ள ஏரிக்கு அருகே நீண்ட தூரம் நடந்தேன். நான் ஒரு மோசமான படத்தை எடுத்ததை என்னால் நம்ப முடியவில்லை. நான் உடைந்து போனேன். குழம்பினேன்.
ஜனவரி 21, 2020. இந்தப் பதிவை நான் பார்த்தேன். அமெரிக்காவைச் சேர்ந்த விமரிசகர், இந்தியப் படங்களைப் பார்த்து விமரிசிப்பார். 2016-ல் வெளிவந்த சிறந்த இந்தியப் படங்களில் ஒன்றாக என்னுடைய படத்தையும் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் நான் இப்போது இன்னும் குழப்பமாக உள்ளேன். என்னால் என் படங்களை இனியும் மதிப்பீடு செய்ய முடியாது. நான் இனிமேல் இதைப் பற்றி பேசமாட்டேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.