காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

செல்ஃபி எடுத்தவரின் செல்போனைப் பறித்த சல்மான் கான்: வைரலாகும் விடியோ

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்துச் சென்ற விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

News image
Updated On :28 ஜனவரி 2020, 1:18 pm

DIN


பாலிவுட் நடிகர் சல்மான் கான் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்துச் சென்ற விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் கோவா விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது, ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த சல்மான் கான் அவருடைய செல்போனைப் பறித்துச் சென்றார். இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதன்பிறகு, செல்ஃபி எடுக்க முயன்ற அந்த நபர் ஒரு விமான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என்பது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் குறித்து கோவா விமான நிலையத்தின் மூத்த அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில், "இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து உறுதிபடுத்தியுள்ளோம். இதுதொடர்பாக முறையாகப் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. ஆனால், விடியோ வைரலாகிவிட்டது" என்றார்.

விமான நிலைய காவல் ஆய்வாளரைத் தொடர்புகொண்டபோது, முறையாகப் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.