வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பிரபல தொலைக்காட்சி நடிகைக்கு கரோனா!

இரு வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சித் தொடர்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் நவ்யா...

News image
Actress navya swamy coranovirus news
Updated On :2 ஜூலை 2020, 5:52 pm

DIN

தெலுங்கு தொலைக்காட்சி நடிகை நவ்யா ஸ்வாமி, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டார் மா, ஈ டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தொடர்களில் கதாநாயகியாக நடித்து கவனம் பெற்றுள்ள நவ்யா ஸ்வாமி, இன்ஸ்டகிராமில் விடியோ வெளியிட்டுள்ளார். அதில் தான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். இரு வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சித் தொடர்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் நவ்யா. இதனால் அவருடன் இணைந்து படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவுள்ளார்கள்.

இன்ஸ்டகிராம் விடியோவில் நவ்யா ஸ்வாமி கூறியதாவது”

கடந்த சில வாரங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது பரிசோதனை செய்துகொள்ளுங்கள். கரோனா வைரஸ் உங்களுக்கு உறுதி செய்யப்பட்டுவிட்டால் கவலைப்பட வேண்டாம். மக்கள் எதிர்மறையாகப் பேசினால் அதைக் கேட்க வேண்டாம். தகுந்த மருத்துவமும் நல்ல உணவும் நிச்சயம் நம்மைக் காப்பாற்றும். நான் நல்ல உடல்நலத்துடன் உள்ளேன். மீண்டும் அனைவரையும் சந்திப்பேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.