நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆகஸ்ட் 8-ல் ராணா டகுபதிக்குத் திருமணம்!

ஆகஸ்ட் 8 அன்று ஹைதராபாத்தில் நடிகர் ராணா டகுபதி - மிஹீகா திருமணம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2020, 11:32 am

DIN

ஆகஸ்ட் 8 அன்று ஹைதராபாத்தில் நடிகர் ராணா டகுபதி - மிஹீகா திருமணம் நடைபெறவுள்ளது.

ராணா டகுபதி. 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

தன்னுடைய காதலியைச் சமீபத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ராணா டகுபதி. மிஹீகா பஜாஜின் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு எனக்குச் சம்மதம் சொன்னார் என ராணா குறிப்பிட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோவின் நிறுவனர். மே 21 அன்று இரு குடும்பத்தினரும் சந்தித்து திருமணம் பற்றி விவாதித்தார்கள். 

இந்நிலையில் ஆகஸ்ட் 8 அன்று ஹைதராபாத்தில் ராணா டகுபதி - மிஹீகா திருமணம் நடைபெறவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைந்த அளவினான நபர்களே இத்திருமணத்தில் கலந்துகொள்வார்கள் என்று அறியப்படுகிறது. ஐந்து நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெறும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் கரோனா காரணமாக ராணா வீட்டிலேயே திருமணம் நடைபெறவுள்ளதாகச் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.