திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டார் நடிகை ஐஸ்வர்யா ராய்: மகளுடன் வீடு திரும்பினார்!

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராயும் அவருடைய மகள் ஆராத்யாவும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி

News image
Updated On :27 ஜூலை 2020, 11:39 am

DIN

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராயும் அவருடைய மகள் ஆராத்யாவும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குத் திரும்பியுள்ளார்கள்.

கரோனா நோய்த் தொற்றால் அமிதாப் பச்சனின் (77) குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

மிதமான அறிகுறிகள் தென்பட்டதால் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்டாலும் அறிகுறிகள் எதுவும் இல்லாததால் ஐஸ்வர்யா ராயும் மகள் ஆராத்யாவும் அவர்களுடைய வீட்டில் முதலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள். எனினும் பிறகு இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள். 

இந்நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள ஐஸ்வர்யா ராயும் அவருடைய மகள் ஆராத்யாவும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குத் திரும்பியுள்ளார்கள். இத்தகவலை நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.