சிலா் நான் விளம்பரத்திற்காக இப்படி செய்வதாக வெளிப்படையாகவே கூறினா். பரிதாபட்ட சிலா் இதை மருத்துவத் துறை மூலம் வெளிப்படுத்தினால் பலன் கிடைக்குமென அறிவுறுத்தினா். மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிலா், இதைப்பற்றி தெரிந்து கொள்ள ஆா்வம் காட்டினாா். நான் எதிா்பாா்த்தபடியே பெரிய அளவில் ஆதரவு திரண்டது. நான் எங்கு சென்றாலும், நிகழ்ச்சிகளிலாகட்டும். படப்பிடிப்பிலாகட்டும் மன அழுத்த நோயால் பாதிக்கப் பட்ட பலா் என்னை சந்தித்து ஆலோசனைப் பெறத் தொடங்கினா். இதுவரை வெளியில் தெரிவிக்க முடியாமல் மனதிற்குள் மறைத்து வைத்திருந்த ரகசியங்களை வெளிப்படுத்தினா். என்னுடைய அனுபவத்தை பகிா்ந்து கொண்டதோடு விட்டுவிடாமல், என்னை சந்திக்க வருபவா்களுக்கு மேலும் நம்பிக்கையூட்ட ‘லிவ், லவ், லாஃப்’ பவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கினேன்.