4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இனி பாருங்கள் என் நடிப்பை: சவால் விடும் சமந்தா

இதற்குப் பிறகு இன்னும் நல்ல நடிகையாக நான் இருப்பேன். பொறுத்திருந்து பாருங்கள். இல்லாவிட்டால்...

News image
Updated On :7 மே 2020, 10:44 am

DIN

கரோனா ஊரடங்குக் காலத்தில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் வீட்டைச் சுத்தம் செய்வது, சமையலில் புத்தம் புது உணவு வகைகளை முயற்சி செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் புகைப்படம், விடியோக்களைச் சமூகவலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் நடிகை சமந்தா, ஹாலிவுட் நடிகை ஹெலன் மிர்ரனிடமிருந்து இணையம் வழியாக நடிப்புப் பயிற்சியைக் கற்றுக்கொண்டு வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:

பல மணி நேரங்களில் ஒரு மணி நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும்போது அதை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்குப் பிறகு இன்னும் நல்ல நடிகையாக நான் இருப்பேன். பொறுத்திருந்து பாருங்கள். இல்லாவிட்டால்... இந்தப் பதிவை நீக்கிவிடுவேன் என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த 74 வயது ஹெலன் மிர்ரன், தி குயின் படத்தில் எலிசபெத் ராணியாக நடித்து சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார். பலமுறை சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.