ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மாற்றம் ஒன்றே மாறாதது: அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் படங்கள்!

பொன்மகள் வந்தாள் படம் மே 29 அன்றும் பெண்குயின் படம் ஜூன் 19 அன்றும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 மே 2020, 4:56 am

DIN

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் ஆகிய இரு படங்களும் அமேசான் பிரைம் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரோனா தொற்று  பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதுமே மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட முயன்ற நடிகர் சூர்யாவுக்கு ஏராளமான தடையை ஏற்படுத்தினார்கள். பெரிய நிறுவனம் தயாரிப்பில் பெரிய நடிகை நடித்த படமொன்று அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாவதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையைத் தாண்டி பொன்மகள் வந்தாள் படம் அமேசான் தளத்தில் வெளியானால் சூர்யா மற்றும் 2டி நிறுவனம் தொடர்புடைய படங்களை வெளியிட மாட்டோம் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பு தனது எதிர்ப்பைப் பலமாகப் பதிவு செய்தது.

ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கு உதாரணமாக ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படங்கள் அமேசான் பிரைம் தளத்தில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா போன்ற பிரபல நடிகர்கள் நடித்த குலாபோ சிதாபோ (Gulabo Sitabo) என்கிற ஹிந்திப் படம் நேரடியாக அமேசான் பிரைமில் ஜூன் 12 முதல் வெளியாகவுள்ளது. இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஷூஜித் சிர்கார் இயக்கியுள்ளார்.

இதையடுத்து அமேசான் பிரைமில் வெளியாகும் படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் ஆகிய இரு தமிழ்ப் படங்களும் நேரடியாக அமேசானில் வெளியாகவுள்ளன.

பொன்மகள் வந்தாள் படம் மே 29 அன்றும் பெண்குயின் படம் ஜூன் 19 அன்றும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

மேயாத மான், மெர்குரி படங்களை அடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள பெண்குயின் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். கதாநாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தப் படத்தை ஈஷ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன். கீர்த்தி சுரேஷின் 24-வது படம் இது.

அறிமுக இயக்குநர் ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்கியுள்ள பொன்மகள் வந்தாள் படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பாண்டியராஜன் போன்றோர் நடித்துள்ளார்கள். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இசை - கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு - ராம்ஜி, படத்தொகுப்பு - ரூபன்.

இதையடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் இந்த முடிவை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது வரும் நாள்களில் தெரியவரும்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.