தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மராத்தா மந்திர் திரையரங்கில் மீண்டும் வெளியாகியுள்ள ஷாருக் கானின் தில்வாலே படம்!

ரூ. 4 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுக்க ரூ. 100 கோடிக்கும் அதிகமாக...

News image
Updated On :6 நவம்பர் 2020, 10:41 am

DIN

ஷாருக் கான் - கஜோல் நடிப்பில் 1995-ல் வெளியான படம் - தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே. ஆதித்ய சோப்ரா இயக்கினார். ரூ. 4 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுக்க ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. மகத்தான ஹிந்திப் படங்களில் ஒன்றாக மதிப்பிடப்படும் இந்தப் படம் மீண்டும் மும்பை மராத்தா மந்திர் திரையரங்கில் வெளியாகியுள்ளது.

எட்டு மாதங்களுக்குப் பிறகு மும்பையில் திரையரங்குகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், வெளியாகி 25 வருடங்களை நிறைவு செய்த தில்வாலே... படம் மராத்தா மந்திர் திரையரங்கில் மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. மராத்தா மந்திர் திரையரங்கில் மட்டும் இந்தப் படம் 1274 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது.

இந்தியத் திரையுலகில் அதிக நாள் ஓடிய படமான தில்வாலே..., மீண்டும் மராத்தா மந்திர் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. ராஜ் - சிம்ரன் உலகில் மீண்டும் ரசிகர்கள் பயணிக்க மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் சார்பாக ரோஹன் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். 

25 வருடங்கள் நிறைவு செய்ததையடுத்து தில்வாலே... படம் சமீபத்தில் ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் மீண்டும் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.