வசூல் சக்ரவர்த்தி விஜய்யைச் சந்தித்த வருண் சக்ரவர்த்தி
சென்னைக்குத் திரும்பியுள்ள வருண், நடிகர் விஜய்யைச் சந்தித்துள்ளார்...


இந்த வருட ஐபிஎல் போட்டியில் மிகச்சிறப்பாகப் பந்துவீசி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார் தமிழக சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி. கொல்கத்தா அணியில் விளையாடிய வருண், 13 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி - 7.10
ஐபிஎல் போட்டிக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டி20 அணியில் வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றார். எனினும் காயம் காரணமாக அத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ஐபிஎல் போட்டி நடைபெற்றபோது தோனி, கோலி, பாண்டிங், சுனில் கவாஸ்கர் போன்ற பிரபலங்களுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டார் வருண் சக்ரவர்த்தி. இந்நிலையில் சென்னைக்குத் திரும்பியுள்ள வருண், நடிகர் விஜய்யைச் சந்தித்துள்ளார். விஜய்யுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.
உள்ள வந்தா பவர் அடி, அண்ணன் யாரு, தளபதி... என விஜய்யைச் சந்தித்ததைக் குஷியுடன் குறிப்பிட்டுள்ளார் வருண் சக்ரவர்த்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...