க/பெ. ரணசிங்கம், சைலன்ஸ் என இரு தமிழ்ப் படங்கள் ஓடிடி தளங்களில் இன்று வெளியாகியுள்ளன.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரையரங்குகளில் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு இல்லை. கரோனாவால் திரைப்படத் துறையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலில், சினிமாவின் மாற்றுத் தளமாக ‘ஓடிடி’ அமைந்திருக்கிறது. வீட்டுக்குள் இருந்து தொலைக்காட்சி, இணையம் வழியாக படங்களைப் பார்த்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். இதனால் நெட்பிளிக்ஸ், அமேஸான் பிரைம் போன்ற ஓடிடி தளங்கள் அதிகம் பலனடைந்துள்ளன.
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள படம் - நிசப்தம். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. ரெண்டு படத்துக்குப் பிறகு மாதவன் - அனுஷ்கா ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். தெலுங்கில் நிசப்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், மலையாளத்தில் சைலன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
2018-ல் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த வருடம் ஏப்ரல் 2 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
சைலன்ஸ் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கியுள்ள படம் - க/பெ. ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
க/பெ. ரணசிங்கம் படம் நேரடியாக ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ரூ. 199 செலுத்தினால் க/பெ. ரணசிங்கம் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்க முடியும்.
ஒரே நாளில் ஓடிடி தளங்களில் இரு தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த மாதக் கடைசியில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹார்ட் பீட் 3: ரீனாவும் அர்ஜுனும் ஒன்று சேர்கிறார்களா?

7,000mAh அதீத பேட்டரி... ரியல்மி 16 எக்ஸ் விற்பனை தொடக்கம்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வாரா துருவ் ஜுரெல்?

வரலட்சுமி விரதம் எப்போது?
விடியோக்கள்

கருணாநிதி,கண்ணதாசன் நட்பும் பிரிவும்| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -3



