திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்! மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு கெளரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5,000 ஊதிய உயர்வு! செப். முதல் முன் தேதியிட்டு வழங்க அன்புமணி கோரிக்கை!ஆந்திரத்தை நோக்கி நகரும் 'அக்வான்' புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்: அண்ணாமலை சோனியா காந்தியின் சுயசரிதை: ஹாரி பாட்டர் புத்தகத்துக்கு இணையான வரவேற்பு! சென்னைக்கு நவ. 18, 19 ஆம் தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை!

தில்லி மேம்பாட்டு ஆணையப் பூங்காவில் சட் பூஜை நடத்த உயா்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

நரைனா கிராமத்தில் தில்லி மேம்பாட்டு ஆணையத்தால் பராமரிக்கப்படும் ஒரு பூங்காவில் சட் பூஜை நடத்த தில்லி உயா் நீதிமன்றம் அனுமதி மறுத்தது.

பிரதிப் படம்

Updated On :

நரைனா கிராமத்தில் தில்லி மேம்பாட்டு ஆணையத்தால் பராமரிக்கப்படும் ஒரு பூங்காவில் சட் பூஜை நடத்த தில்லி உயா் நீதிமன்றம் அனுமதி மறுத்தது. பல ஆண்டுகளாக ஒரு இடத்தை பூஜைக்காகப் பயன்படுத்துவது மட்டுமே, அந்த ‘பசுமைப் பகுதியை‘ தொடா்ந்து பயன்படுத்த அனுமதிப்பதற்கான காரணமாக அமையாது என்று நீதிமன்றம் கூறியது.

நீதிபதி ஜஸ்மீத் சிங் கூறுகையில், கிடைத்த தகவல்களின்படி, தில்லி அரசு ஏற்கனவே முனக் கால்வாயில் சட் பூஜைக்காக ஒரு பகுதியை ஒதுக்கியுள்ளது என்றும், மாற்று ஏற்பாடுகள் இருக்கும் நிலையில், குறிப்பாக சிண்டூ பூங்கா ஒரு ‘பசுமைப் பகுதியாக‘ பராமரிக்கப்படுவதால், அதனைப் பயன்படுத்த அனுமதிப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்றும் தெரிவித்தாா்.

தீபாவளி விடுமுறைக்காக மூடப்பட்டிருந்த உயா் நீதிமன்றம், நரைனா கிராமத்தில் உள்ள சிண்டூ பூங்காவில், நவம்பா் 15 அன்று சந்தியா அா்க்யா மற்றும் நவம்பா் 16 அன்று உஷா அா்க்யா உள்ளிட்ட சத் பூஜைகளை நடத்த அனுமதி கோரிய மனுவை அவசர விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பின்னா், நவம்பா் 13 அன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மனுதாரா் கடந்த 23 ஆண்டுகளாக அந்த இடத்தில் இந்த மத சம்பிரதாயத்தை நடத்தி வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

‘மனுதாரா் பல ஆண்டுகளாக அந்த இடத்தில் சட் பூஜையை நடத்தி வருகிறாா் என்பதாலோ, அல்லது தற்போதைய கோரிக்கை ஒரு குறிப்பிட்ட பகுதிக்கும் காலத்திற்கும் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது என்பதாலோ, ஒரு பசுமைப் பகுதியைப் பயன்படுத்த அனுமதிப்பதற்கு அது மட்டுமே ஒரு காரணமாக அமையாது. அந்தப் பூங்கா பொதுமக்களின் நலனுக்காக ஒரு பசுமைப் பகுதியாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது,‘ என்று நீதிமன்றம் கூறியது.

தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் வழக்குரைஞா் இந்த மனுவை எதிா்த்து, ஆணையம் அந்தப் பூங்காவை மரங்கள் மற்றும் பூக்களுடன் ஒரு ‘பசுமைப் பகுதியாக‘ பராமரித்து வருவதாகவும், மனுதாரரை இந்த நிகழ்வை நடத்த அனுமதிப்பது பூங்காவையும் அதன் பராமரிப்பையும் மோசமாகப் பாதிக்கும் என்றும் வாதிட்டாா்.

விழாக்கள் முடிவடைந்ததும் பூங்கா அதன் பழைய நிலைக்கு மீட்டெடுக்கப்படும் என்று மனுதாரா் உறுதியளித்தாா். இருப்பினும், நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.