தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

நடிகர் சூரிதான் முன்பணத்தைத் திருப்பித் தர வேண்டும்: விஷ்ணு விஷால் அறிக்கை

சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது.

News image
Updated On :9 அக்டோபர் 2020, 11:22 am

DIN

என் மீதும் என் தந்தை மீதும் உள்நோக்கத்துடன் பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார். 

நிலம் வாங்கித் தருவதாகக் கூறி நடிகர் சூரியை மோசடி செய்ததாகத் திரைப்படத் தயாரிப்பாளர் உள்பட இருவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிலம் வாங்கித் தருவதாக 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வீர தீர சூரன் படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் ஆகியோர் மீது நடிகர் சூரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காகத் தனக்கு ரூ. 40 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ள தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நிலம் வாங்கித் தருவதாகப் பணம் பெற்று மோசடி செய்ததாக தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார் சூரி. 

ஆனால் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சூரி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நில மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் ஆகியோர் மீது சென்னை அடையார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் தன் மீதும் தன் தந்தை (ரமேஷ்) மீதும் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றி படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும் வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது. உண்மையில் நடிகர் சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸுக்கு ஒரு முன்பணத்தை திருப்பித் தர வேண்டும். கவரிமான் பரம்பரை என்கிற படத்துக்காக 2017-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.