பிரபல நடிகர் பிரித்விராஜுக்கு கரோனா பாதிப்பு
அப்படத்தின் இயக்குநரான டிஜோ ஜோஸும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால்...


பிரபல நடிகர் பிரித்விராஜ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஆடுஜீவிதம் (Aadujeevitham) என்கிற படத்துக்காக நடிகர் பிரித்விராஜ் மற்றும் படக்குழுவினர் கடந்த மார்ச் மாதம் ஜோர்தான் சென்றார்கள். கரோனா ஊரடங்கு காரணமாக அனைவரும் ஜோர்தானில் மாட்டிக்கொண்டார்கள். பிறகு கடந்த ஜூன் மாதம் படக்குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக இந்தியாவுக்குத் திரும்பினார்கள்.
இந்நிலையில் கொச்சியில் நடைபெற்ற ஜனகனமண என்கிற மலையாளப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அப்படத்தின் இயக்குநரான டிஜோ ஜோஸும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜனகனமண படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து படக்குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...