பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

நடிகை மேக்னா ராஜுக்கு ஆண் குழந்தை: வெள்ளித் தொட்டில் தயார்!

குழந்தைக்காக ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வெள்ளித் தொட்டிலை துருவா சர்ஜா வாங்கியுள்ளார்.

News image
Updated On :22 அக்டோபர் 2020, 9:11 am

DIN

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவும் நடிகை மேக்னா ராஜும் 2018 ஏப்ரலில் திருமணம் செய்துகொண்டார்கள். கடந்த ஜூன் மாதம் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

அப்போது, மேக்னா ராஜ், 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். தனக்குச் சமீபத்தில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களை மேக்னா வெளியிட்டார். அதில், மேக்னாவின் அருகில் சிரஞ்சீவி சர்ஜாவின் ஆளுயர கட் அவுட் இடம்பெற்றிருந்தது. வளைகாப்பு நிகழ்ச்சியின்போது தனக்கு அருகில் சிரஞ்சீவி சர்ஜா நிற்பது போன்ற இந்த ஏற்பாடு ரசிகர்களை மிகவும் உருகவைத்தது. 

இந்நிலையில் மேக்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரரான நடிகர் துருவா சர்ஜா இத்தகவலை வெளியிட்டுள்ளார். இன்று காலை 11.07 மணிக்கு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்துள்ளது. இதே தேதியில் தான் (அக்டோபர் 22) சிரஞ்சீவி சர்ஜாவுக்கும் மேக்னாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனால் சிரஞ்சீவியை மீண்டும் பார்ப்பது போல் உள்ளதாக சிரஞ்சீவி சர்ஜாவின் தாய் பேட்டியளித்துள்ளார். 

Story image

குழந்தைக்காக ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வெள்ளித் தொட்டிலை துருவா சர்ஜா வாங்கியுள்ளார். இதுபோன்ற ஒரு தொட்டிலை வாங்கவேண்டும் என்பது என் சகோதரரின் விருப்பம். அதை நான் நிறைவேற்றியுள்ளேன் என துருவா பேட்டியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.