சூரரைப் போற்று பட வெளியீடு தாமதமாகிறதா?
அனுமதி பெறுவதில் சிக்கலோ தாமதமோ ஏற்பட்டால் படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக...


இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் அடுத்த படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம்.
கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.
சூரரைப் போற்று படம், அக்டோபர் 30-ல் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூரரைப் போற்று வியாபாரம் மூலம் கிடைத்த தொகையிலிருந்து ரூ. 5 கோடியை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் வழங்குவதாக சூர்யா அறிவித்துள்ளார். அமேசான் பிரைம் மூலமாக 200 நாடுகளில் சூரரைப் போற்று படம் வெளியாகும் என 2டி நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சூரரைப் போற்று படம் திட்டமிட்டபடி அக்டோபர் 30 அன்று வெளியாவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சூரரைப் போற்று படம் விமானம் தொடர்பான கதை என்பதால் இந்திய விமானத்துறையிடமிருந்து அனுமதி வாங்கிய பிறகுதான் படத்தை ஓடிடியில் வெளியிடமுடியும். இந்த அனுமதியை அக்டோபர் 25-ம் தேதிக்கு முன்னர் பெறத் தவறினால் அக்டோபர் 26 அன்று சூரரைப் போற்று படத்தை அமேசான் பிரைமில் வெளியிட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. அனுமதி பெறுவதில் சிக்கலோ தாமதமோ ஏற்பட்டால் படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...