அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தெலுங்கு நடிகை தற்கொலை!

டிக்டாக் செயலி மூலம் அறிமுகமான தேவ்ராஜ் என்கிற நபர் தனது சகோதரியிடம் பணம் கேட்டுத் துன்புறுத்தியதாக...

News image
Updated On :9 செப்டம்பர் 2020, 6:07 am

DIN

தெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஸ்ரவானி கொண்டபல்லி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மனசு மமதா, மெளனராகம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் ஸ்ரவானி நடித்துள்ளார். இந்நிலையில் ஹைதராபாத் மதுராநகரில் உள்ள தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருடைய பெற்றோர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் ஸ்ரவானியின் உடலைப் பிரதேசப் பரிசோதனைக்கு அனுப்பினார்கள். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். 

டிக்டாக் செயலி மூலம் அறிமுகமான தேவ்ராஜ் என்கிற நபர் தனது சகோதரியிடம் பணம் கேட்டுத் துன்புறுத்தியதாக ஸ்ரவானியின் சகோதரர் ஷிவா பேட்டியளித்துள்ளார். இதையடுத்து ஸ்ரவானியின் பெற்றோர் தேவ்ராஜ் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்கள். இதையடுத்து தேவ்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.