பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது: மகன் சரண்
எஸ்.பி.பி.யின் உடல்நிலை பற்றி அவருடைய மகன் சரண், ட்விட்டரில் தெரிவித்ததாவது...


கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் எஸ்.பி.பிக்கு வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் ஐசியூ பிரிவில் தொடா்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை பற்றி அவருடைய மகன் சரண், ட்விட்டரில் தெரிவித்ததாவது:
எஸ்.பி.பி.யின் உடல் நிலை சீராக இருக்கிறது. இயன்முறை சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் ஐசியூ பிரிவில் தொடா்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. விரைவில் இவற்றின் உதவி தேவையில்லாத நிலைக்கு அவர் வருவார் என நம்புகிறோம். எம்ஜிஎம் மருத்துவமனைக் குழுவினருக்கும் அவருக்காகப் பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...