நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மண்டேலா படம் பார்த்துவிட்டு யோகி பாபுவுடன் பேசிய ஐபிஎல் வீரர்!

யோகி பாபுவின் அபாரமான நடிப்பைக் கண்டு வியந்தேன். என்ன ஒரு நடிகர், என்ன ஒரு கதை...

News image
Updated On :12 ஏப்ரல் 2021, 12:21 pm

DIN

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார் நடித்துள்ள மண்டேலா படம் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகி அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ஷஷிகாந்த் இப்படத்தைத் தயாரித்துள்ளார். தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் மண்டேலா படத்தைப் பாராட்டி ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி ட்வீட் வெளியிட்டுள்ளார். 

31 வயது ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, இதுவரை 31 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருட ஐபிஎல்லில் இரு ஆட்டங்களில் விளையாடினார்.

ட்விட்டரில் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி கூறியதாவது:

சில நாள்களுக்கு முன்பு மண்டேலா படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்த்தேன். யோகி பாபுவின் அபாரமான நடிப்பைக் கண்டு வியந்தேன். என்ன ஒரு நடிகர், என்ன ஒரு கதை! (தமிழக வீரர்) நடராஜனின் நண்பர்  என்பதை அறிந்தேன். அவர், யோகி பாபுவிடம் விடியோ காலில் என்னைப் பேச வைத்தார் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.