அடுத்தது வாழ்க்கை வரலாற்றுப் படம்: மாரி செல்வராஜ் தகவல்
படப்பிடிப்பில் உள்ளார் துருவ் விக்ரம். அது முடிந்த பிறகு என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்...


இயக்குநர் மாரி செல்வராஜின் 3-வது படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜ், தனுஷ் நடிப்பில் அடுத்து இயக்கிய கர்ணன் படத்திலும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
தனது மூன்றாவது படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை இயக்குகிறார் மாரி செல்வராஜ்.
கபடி வீரரின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவுள்ளார் மாரி செல்வராஜ். இதுபற்றி சினிமா எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
அடுத்த படத்துக்கான திரைக்கதைப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். வாழ்க்கை வரலாற்றுப் படம் என்பதால் சற்று சுலபமாக உள்ளது. தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் துருவ் விக்ரம். அது முடிந்த பிறகு என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றார்.
பா. இரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம், மாரி செல்வராஜின் அடுத்த படத்தைத் தயாரிக்கிறது. கபடி வீரராக துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...