திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பிரபல நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கரோனா பாதிப்பு

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். வீட்டில் தனிமைப்படுத்தப்படுத்திக் கொண்டுள்ளேன்

News image
Updated On :26 ஏப்ரல் 2021, 12:05 pm

DIN

பிரபல நடிகை பூஜா ஹெக்டே, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மாஸ்டர் படத்துக்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய்யின் 65-வது படத்துக்கு ஒளிப்பதிவு - மனோஜ் பரமஹம்சா. இசை - அனிருத்.

இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார். பூஜா ஹெக்டே, 2012-ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு ஏராளமான தெலுங்குப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் பூஜா ஹெக்டேவுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அவர் கூறியதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். வீட்டில் தனிமைப்படுத்தப்படுத்திக் கொண்டுள்ளேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.