இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல்
இயக்குநர் கே.வி. ஆனந்தின் மறைவிற்கு நடிகர் சூர்யா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


இயக்குநர் கே.வி. ஆனந்தின் மறைவிற்கு நடிகர் சூர்யா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரான கே.வி. ஆனந்த் மாரடைப்பால் இன்று காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது. அவரது திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “கே.வி.ஆனந்த் சார்...இது பேரிடர் காலம் என்பதை உங்கள் மரணம் அறைந்து நினைவூட்டுகிறது. நீங்கள் இல்லை என்கிற உண்மை மனமெங்கும் அதிர்வையும் வலியையும் உண்டாக்குகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
"முதன்முதலில் என்மீது பட்ட வெளிச்சம் உங்கள் கேமராவில் இருந்து வெளிப்பட்டது" என தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்துள்ள சூர்யா, "என்னுடைய திரையுலகப் பயணத்தில் உங்களின் பங்களிப்பும், வழிகாட்டலும் மறக்க முடியாது" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் "எங்கள் நினைவில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள் சார்..இதயப் பூர்வமான நன்றி அஞ்சலி" என அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா அயன், மாற்றான், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...