ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பிரபல நட்சத்திர தம்பதியின் மகள் பகிர்ந்த புகைப்படம்: 'அடுத்த கதாநாயகி தயார்': ரசிகர்கள் கருத்து

நடிகர் திலீப் மற்றும் மஞ்சு வாரியரின் மகள் மீனாக்ஷி பகிர்ந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

News image
Updated On :11 ஆகஸ்ட் 2021, 9:55 am

DIN

நடிகர் திலீப் மற்றும் மஞ்சு வாரியரின் மகள் மீனாக்ஷி பகிர்ந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

பிரபல மலையாள நடிகரான திலீப் தமிழில் 'ராஜ்ஜியம்' படத்தில் நடிகர் விஜயகாந்த்திற்கு தம்பியாக நடித்திருந்தார். இவர் நடிகை மஞ்சு வாரியரை கடந்த 1995 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். 

நடிகை மஞ்சு வாரியர் தமிழில் 'அசுரன்' படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் திலீப் மற்றும் மஞ்சு வாரியர் தம்பதிக்கு மீனாக்ஷி என்ற மகள் உள்ளார். 

Story image

இந்த நிலையில் இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் நடிகை காவ்யா மாதவனை, திலீப் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இதன் ஒரு பகுதியாக திலீப் - மஞ்சு வாரியரின் மகள் மீனாக்ஷி இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது சிவப்பு உடையில் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு அடுத்த கதாநாயகி தயார் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.