மிகவும் ஒல்லியான நடிகர் சிம்பு: மிரண்டு போன ரசிகர்கள்
கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தில் இருந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


கௌதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இருந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக புதிய போட்டோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுதியுள்ளார். நடிகை ராதிகா சரத்குமார் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடிகர் சிம்புவின் தோற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் தனது கதாப்பாத்திரத்திற்காக மிகவும் ஒல்லியாக மாறியிருக்கிறார் நடிகர் சிம்பு. அவரது உழைப்பை பார்த்த ரசிகர்களுக்கு சிம்புவின் மேலானமதிப்பு ஒரு படி உயர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...