கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தலிபான்களுடன் ஹிந்துத்துவாவை ஒப்பிட்ட தனுஷ் பட நடிகை - வலுக்கும் எதிர்ப்பு

தனுஷின் ராஞ்சனா பட நடிகை ஸ்வரா பாஸ்கர், லிபான்களுடன் ஹிந்துத்துவாவை ஒப்பிட்டு பேசியதற்கு எதிர்ப்புகள் வலுக்கின்றன.  

News image
Updated On :18 ஆகஸ்ட் 2021, 12:23 pm

DIN

தனுஷின் 'ராஞ்சனா' பட நடிகை ஸ்வரா பாஸ்கர், லிபான்களுடன் ஹிந்துத்துவாவை ஒப்பிட்டு பேசியதற்கு எதிர்ப்புகள் வலுக்கின்றன. 

ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறினார்.  தலிபான்களுக்கு அஞ்சி ஏறாளமான ஆப்கானியர்களும்  வெளியேறி வருகின்றனர். 

ஆப்கானிஸ்தானில் முந்தைய அரசை ஆதரித்த அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். மேலும் தங்களது அரரசில் பெண்கள் கல்வி கற்பதற்கும் பணியாற்றுவதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.  தலிபான்களின் முகநூல் கணக்குகள் மற்றும் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் பிரபல ஹிந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர், தலிபான் தீவிராவதத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது. அதே போல ஹிந்துத்துவா தீவிரவாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.  நமது மனிதாபிமானம் என்பது ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்குபவர்களை அடிப்படையாகக் கொண்டு இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். 

தலிபான் தீவிரவாதத்துடன் ஹிந்துத்துவாவை ஒப்பிட்ட நடிகை ஸ்வராவிற்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஹிந்துத்துவா உங்களுக்கு பிரச்னையாக இருந்தால், நீங்கள்  பாகிஸ்தான், வங்கதேசம் ஈராக் போன்ற நாடுகளுக்கு செல்லுங்கள் என காட்டமாக பதிலளித்து வருகின்றனர்.

மேலும், ஸ்வராவை கைது செய்யுங்கள் என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. ஸ்வரா பாஸ்கர், நடிகர் தனுஷ் நடித்த ஹிந்திப் படமான 'ராஞ்சனா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.